கல்பவ்ரிக்ஷா தகவல் மையம்

Kalpavriksha Knowledge Centre

கல்பவ்ரிக்ஷா தகவல் மையம் (KKC), பெயர் குறிப்பிடுவது போல, பெருந்துறையில் உள்ள பாராசூட் கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளையால் உருவாக்கப்பட்டவைகளுக்கான சிறந்த மையமாக இருக்கும். இந்த மையத்தின் முக்கிய நோக்கம், நிபுணர்களின் உதவியுடன் விவசாயத்திற்கான சிறந்த மேலாண்மை நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவை வழங்குவதாகும். பூச்சி, நோய், நீர் மேலாண்மை போன்ற துறைகளில் வேளாண் நிபுணர்களின் வழிகாட்டுதலின்கீழ் மாதிரி அடிப்படையிலான பயிற்சியை விவசாயிகள் பெறுகின்றனர். வகுப்பறைப் பயிற்சிக்குப் பிறகு, திறந்தவெளி குழுக் கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றது.

இறுதியாக, இந்த விவசாயிகள் எங்கள் கல்பவ்ரிக்ஷா மாதிரிப் தோப்பைப் பார்வையிடலாம், இது சிறந்த நடைமுறைகளைக் காண்பிக்கும் மாதிரித் தோப்பாக செயல்படுகிறது.