பாராசூட் கல்பவ்ரிக்ஷா

எங்களைப் பற்றி

பாராசூட் கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளை

இந்திய விவசாயிகளுக்கு, கல்பவ்ரிக்ஷா திட்டமானது அவர்களின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேரிகோவால் நிறுவப்பட்ட, பாராசூட் கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளையின் நோக்கம் இந்திய விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். "கல்பவ்ரிக்ஷா" என்ற வார்த்தை தேவநாகரி எழுத்து "கல்பா" (கற்பனை/ஆசை) மற்றும் "விரிக்ஷா" (மரம்) என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் மரம். நாங்கள் இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். தற்போது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட 2.75 லட்சம் ஏக்கர் தோட்டங்களை உள்ளடக்கிய 65,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளை நாங்கள் பதிவு செய்துள்ளோம்.

100க்கும் மேற்பட்ட வேளாண் வல்லுநர்கள் கொண்ட எங்கள் குழு, விவசாயிகளுக்குத் தொடர்ந்து வருகை தந்து, அறிவியல் விவசாய முறைகள் குறித்து அவர்களுக்குக் கற்பித்து, அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுகிறது. எங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் திட்டத்தைத் தவிர, தொலைபேசியில் வேளாண் நிபுணர், வேளாண் வணிக மையங்கள் (ஏபிசி), பண்ணைக் குளங்கள் அமைப்பதன் மூலம் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள், கல்பவ்ரிக்ஷா அறிவு மையம் மூலம் விவசாயிகளுக்கு வகுப்பறை பயிற்சி போன்ற பிற சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.

நன்கொடை வழங்குங்கள்

ஒரு வேளாண் விஞ்ஞானி ஏன் இந்த வேலையை திருப்திகரமாக காண்கிறார்?

நான் 2017 ஆம் ஆண்டு முதல் பாராசூட் கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளையில் வேளாண் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறேன். நமது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பாடுபடும் இந்த அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஒரு விவசாய பட்டதாரி என்பதால், எனது அறிவைப் பயன்படுத்தி விவசாய சமூகத்திற்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்க முடியும்.

எனது வழக்கமான நாள், அன்றைய எனது வருகை அட்டவணையைத் திட்டமிடுவதில் தொடங்குகிறது. நான் பண்ணையை அடைந்தவுடன், நான் விவசாயியைச் சந்தித்து, அவர்களின் பண்ணையில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து, அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அவற்றைச் செயல்படுத்துவது தொடர்பாகப் பின்தொடர்வதற்கும் சரியான பரிந்துரைகளை வழங்க உதவுகிறேன். விவசாயம் பற்றிய எனது அறிவு விவசாயிகளின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை ஒவ்வொரு நாளும் பார்க்கும் பொழுது அது எனக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது.

என்னைப் பொறுத்தவரை, ஒரு வேளாண் விஞ்ஞானியாக, வேளாண் கல்லூரிகள் மற்றும் மாநில வேளாண்மைத் துறை போன்ற பல்வேறு பங்குதாரர்கள் மூலம் நிபுணர்கள் மற்றும் ஒத்துழைப்புகள் மூலம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் விவசாயம் பற்றிய பல வெளிப்பாடுகள் மற்றும் கற்றல் வாய்ப்புகளைப் பெறுகிறேன்.

பாராசூட் கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளையின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன், இது எங்கள் விவசாய சமூகத்திற்கு நீர் பாதுகாப்பு, மாதிரிப் பண்ணைகள், வேளாண் வணிக மையம், தொலைபேசியில் வேளாண் நிபுணர் போன்ற பல்வேறு புதுமையான முயற்சிகளுக்கு உதவுகிறது. பாராசூட் கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளையானமகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது என்று நான் நம்புகிறேன். அதனால் நான் ஒரு வேளாண் விஞ்ஞானியாக முன்னேறுவதுடன் எங்கள் குழு விவசாயத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க ஒன்றிணைந்து வழி செய்வோம்

விவசாயிகளின் பொன்னான வார்த்தைகள்

பொள்ளாச்சி

செந்தில்வேல்

எனது பண்ணையில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. எனது விவசாய முறைகள் அவ்வளவு ஒழுங்கமைக்கப்படவில்லை, அதனால், நல்ல விளைச்சலைக் கொடுப்பதற்காக எனது மரங்களை வளர்ப்பதில் பல சிரமங்களை எதிர்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக, 2018 ஆம் ஆண்டில், பாராசூட் கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளையின் பிரதிநிதிகள் எனது பண்ணைக்கு அடிக்கடி வருகை தந்து, பல்வேறு நுட்பங்களைப் பற்றி எனக்குக் கற்றுக்கொடுத்து, பூச்சித் தாக்குதலில் இருந்து எனது பண்ணையைக் காப்பாற்றினர். முந்தைய விளைச்சலைக் காட்டிலும், இந்த ஆண்டு எனது பண்ணையில் கணிசமான அளவு அதிகரிப்பு கிடைத்துள்ளது

பொள்ளாச்சி தெற்கு

ஆர் நடராஜன்

1974ல் இருந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயம் செய்த அனுபவம் இருந்தும், காண்டாமிருக வண்டு மரங்களை தாக்கியதில் சிக்கி தவித்தேன். பாராசூட் கல்பவ்ரிக்ஷா குழு, இப்பூச்சிகளை எப்படிப் பிடிக்கலாம் என்பது பற்றிய தெளிவான உத்திகளுடன் எனக்கு வழிகாட்டியது.

பாராசூட் கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளை, ஒரு மரத்தின் விளைச்சலை அதிகரிப்பதற்கான நீர் மேலாண்மை நுட்பங்கள் மற்றும் வறட்சி காலங்களில் தண்ணீரை சேமிப்பதற்கான உத்திகள் பற்றிய அறிவையும் பகிர்ந்து கொண்டுள்ளது. அவர்கள் மாதம் ஒருமுறை எனது தோப்பிற்கு வந்து விவசாயத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி எனக்கு வழிகாட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

சுப்பே கவுண்டன்புதூர்

ஆர்.திரிபுரசுந்தரி

25 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். தண்டு ரத்தக்கசிவு நோய் நமது தஞ்சாவூர் மரங்களை அதிக அளவில் பாதித்தது. எனவே, பாராசூட் கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளை குழுவை ஆய்வுக்கு அழைக்க முடிவு செய்தோம். ஆய்வுக்குப் பிறகு, அவர்களின் குழு நோயை சரி செய்ய எங்களுக்கு வைத்தியம் பரிந்துரைத்தது. அந்த நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒரு மரத்தில் அதிக விளைச்சளைப் பெறுவதற்குப் பயனளிக்கும் மண்ணில் நைட்ரஜன் அளவு அதிகரித்ததைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். பாராசூட் கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளை விவசாயிகளுக்கான சேவைக்காக நான் முழு மனதுடன் நன்றி கூறுகிறேன்! தொடர்ந்து விவசாயிகளுக்கு சேவை செய்யுங்கள்.

எங்கள் அமைப்பில் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமா?

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்