Donate Now

எங்களின் சேவைகள்

இந்த பூமியில் நம்மிடம் உள்ள மிக விலைமதிப்பற்ற வளங்களில் ஒன்று நீர், அது அதிகரித்து வரும் பற்றாக்குறையில் உள்ளது. இந்த பகுதியில், பாராசூட் கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளையின் முயற்சிகள் நேர்மறையான தாக்கத்திற்கு வழிவகுத்தது.

பாராசூட் கல்பவ்ரிக்ஷா, விவசாயிகளை நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் தென்னந் தோப்பில் குட்டைகள் அமைப்பதற்கும் நிதியுதவி அளிக்கிறது. நிலத்தடி நீரை அதிகமாக சுரண்டுவது சமீப காலமாக விவசாயிகளுக்கு பல சவால்களுக்கு வழிவகுத்தது. குறைந்த மழைப்பொழிவு மற்றும் அதீத வறட்சியால், இந்த சிக்கல் இன்னும் மோசமாகிவிட்டது. வறட்சி கால சமயங்களில் விவசாயத்திற்குத் தண்ணீர் வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.

தென்னதி தோப்பில் குளம் கட்டுமானமானது, மழைநீரை நிலத்தில் உறிஞ்சுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை மீண்டும் நிரப்ப உதவுகிறது. நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பது மட்டுமின்றி, உப்புத்தன்மை கொண்ட நிலத்தடி நீரின் மேல் நன்னீர் அதிகமாக இருப்பதால் நீரின் தரமும் அதிகரிக்கிறது.

விவசாயிகள், ஆண்டு முழுவதும் இந்தக் குளங்களால் வீட்டு உபயோகத்திற்காக நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் பயனடையலாம். கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளை, 2021 நிதியாண்டு வரை 350-க்கும் மேற்பட்ட தென்னந் தோப்பு குளங்களைக் கட்டியுள்ளது, மேலும் 46 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்கும் திறனை உருவாக்கப்பட்டுள்ளது.

புங்ரூ மற்றும் ஊர்த்தவம் போன்ற சில தற்போதைய நீர் பாதுகாப்பு நுட்பங்களையும் நாங்கள் முயற்சித்தோம். புங்ரூ என்பது ஒரு நீர் மேலாண்மை அமைப்பாகும், இது அதிகப்படியான மழைப்பொழிவை நிலத்தடியில் செலுத்தி சேமித்து வறண்ட காலநிலையில் பயன்பாட்டிற்காக வெளியேற்றுகிறது. இத்தொழில்நுட்பத்தால் மண்ணில் உப்பு படிவுகள் குறைந்து, நண்ணீர் விநியோகம் அதிகரித்து விவசாயிகளை வறட்சியிலிருந்து காப்பாற்றுகிறது.

நிலத்தடி நீர் தேக்கங்களில் மழைநீரைச் சேர்ப்பதன் மூலம் நீர்நிலைகளை செயற்கையாக மீண்டும் நிரப்புவதன் மூலம் விவசாயிகள் வருடத்தில் பாதிக்கு மேல் விவசாயத்தைத் தொடர முடிகிறது. உப்புத்தன்மை இல்லாத மழைநீர், நிலத்தடி உப்புநீருடன் கலக்கும் போது, நிலத்தடி நீரின் உப்புத்தன்மையைக் குறைத்து, விவசாய பயன்பாட்டிற்கு ஏற்றதாக ஆக்குகிறது.

குறிப்பாக, மழைக்காலத்தில் தண்ணீரை முறையாக சேமிக்க விவசாயிகளுக்கு கல்வி மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்காட்டி மாதங்களின்படி மேற்கொள்ளப்பட வேண்டிய சிறந்த தோப்பு நடைமுறைகள், அதாவது இயற்கை வளங்களிலிருந்து அதிகபட்ச பலன்களைப் பெறுவதற்காக ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளையின் நீர் பாதுகாப்பு முயற்சிகள் விவசாயிகளின் வாழ்க்கையில் "மாற்றத்தை" ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இயற்கை அன்னை வழங்கிய இந்த விலைமதிப்பற்ற வளத்தைப் பாதுகாப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் உதவியுள்ளது.

நீர் பாதுகாப்பு

தென்னை விவசாயிகளுக்கு பண்ணைக் குட்டைகள் கட்ட ஆதரவு அளியுங்கள். நீங்கள் நன்கொடையாக வழங்கும் ஒவ்வொரு ரூ. 500-யும், ஒரு விவசாயிக்கு சுமார் 12 கன மீட்டர் நீர் சேமிப்பு திறனை உருவாக்க உதவும்.

உற்பத்தித்திறன் அதிகரிப்பு

விவசாயிகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுங்கள்.
ஒவ்வொரு ரூ. 500 நன்கொடையும், தென்னை விவசாயியின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவலாம்.

விவசாய பயிற்சி

விவசாயிகளுக்குத் தென்னை விவசாயத்தின் அறிவியல் முறைகள் குறித்து பயிற்சி பெற உதவுங்கள். நீங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூ. 500 நன்கொடையும், விவசாயிக்கு தென்னை விவசாயத்தின் அறிவியல் முறைகள் குறித்து பயிற்சி பெற உதவலாம்.

விவசாயிகள் எங்கள் சேவையை விரும்புகிறார்கள்

நடராஜன், பொள்ளாச்சி
செல்வராஜ், கோவை
ஆர். திரிபுரசுந்தரி, கவுண்டன்புதூர்

ஒரு மாற்றத்தை உருவாக்க எங்கள் பணியில் சேரவும்

எங்களை அழைக்கவும் எங்களை தொடர்பு கொள்ள